S.K. சுரேஷ்பாபு.
சேலம் Dr. நாகா.அரவிந்தன் குவித்துள்ள விருதுகளுக்கு முத்தாய்ப்பாக மனிதநேய மாமனிதர் விருது வழங்கி, கொற்றவை நியூஸ் சார்பாக நடிகை தேவயானி வழங்கி கௌரவிப்பு
சேலத்தைச் சேர்ந்த பிரபல மனிதர் Dr.அரவிந்தன் அவர்கள். தன்னலம் பாராமல், தனது குடும்ப நலன் பாராமல் மற்றும் ஏழை எளிய பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு தற்பொழுது வரை பணியாற்றிக் கொண்டு இருக்கும் சேலம் Dr. பட்டம் பெற்ற அரவிந்தன் குவித்து வைத்துள்ள பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் இதுபோக எண்ணற்ற விருதுகளையும் குவித்துள்ளது ஏராளம்.
இதனுடைய போற்றுதலுக்குரிய நாகா.அரவிந்தன் அவரின் சிறந்த மனித சேவைகளை பாராட்டி தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தமிழ்நாடு முதன்மை உழைப்பாளராக அவருக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கி கௌரவித்தது மனித உரிமைகள் கழகம். இப்படி இருக்க, விருதுகளின் முத்தாய்ப்பாக, சேலத்தைச் சேர்ந்த எவருக்கும் கிடைக்காத ஒரு அந்தஸ்தை சிறந்த சமூக சேவைக்கான
"மனித நேய மாமனிதர் விருது" கொற்றவை நியுஸ் சார்பாக சென்னையில், திரு கொற்றவை நாகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறந்த சமூக சேவைக்கான அங்கீகாரமாக நாகா ஆர்.அரவிந்தனுக்கு மனித நேய மாமனிதர் விருதை திரைப்பட நடிகை கலைமாமணி.தேவயானி அவர்கள் கலந்து கொண்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இதற்கு மேலும் தனக்கு விருது வேண்டுமா என்ற கேள்வி குறியோடு, தனது வாழ்நாள் முழுவதும் ஒன்று சேவையை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நான் மேற்கொண்டு தான் இருப்பேன் என்று நெகிழ்வோடு அந்த அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டவர்தான் சேலத்தை சேர்ந்த, ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கன் சிறுபான்மையினர் பேரவையின் நிறுவனருமான Dr. நாகா. அரவிந்தன்.
0 coment rios: