கூட்டத்திற்கு தலைவர் எல்.கே.எம். சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் இரா.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், இணை ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் மற்றும் மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் விசைத்தறிகளில் இருந்து வெளிப்படும் ஒலியை சப்த மாசாக கருதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், அது சம்பந்தமாக ஆலோசனைகள் நடத்தியதில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பிற்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பதாகவும், இது சம்பந்தமாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கருத்து கேட்டு அதன் பிறகு தீர்வு காண வேண்டும்,
விசைத்தறிகளை நாடா இல்லாத நவீன மயமாக்கப்பட்ட தறிகளாக மாற்றுவதற்கு, 50 சதவீத மானியத்தை மத்திய அரசும்,
50 சதவீத மானியத்தை மாநில அரசும் வழங்கி, விசைத்தறிகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்,
தமிழ்நாடு அரசின் மின் மானியத்தில் பயனாளியாக டேரிப் 3ஏ2 பிரிவின் கீழ் இயங்கும் அனைத்து விசைத்தறிக்கூடங்களுக்கும், உயர்த்தப்பட்ட சொத்து வரியில் இருந்து விலக்கு அளித்து அழிந்து வரும் விசைத்தறிகளை தமிழக அரசு காக்க வேண்டும்,
வரும் ஆண்டு, விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தி திட்டத்தை, ஜூன் மாதமே துவங்க வேண்டும் என்றும், காட்டன் நூலையே சேலை உற்பத்திக்கான பாவு நூலாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன்.
0 coment rios: