ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை 57 புகார்கள் வந்துள்ளது. அனைத்து புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா பேட்டி.
ஈரோடு ரங்கம்பாளையம் ஆர். ஏ. எம். கலை அறிவியல் கல்லூரியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு வாக்குசாவடியில் பணிபுரிபவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.
பின்னர் பேட்டியளித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்டம், பக்கத்து மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3வது முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 54 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 41 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மீதி 13 லட்சம் விசாரணையில் உள்ளது. 90% வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் 17 வகையான ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.
ஒன்பது வாக்கு மையங்கள் பதட்டமான வாக்கு மையமாக கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை 57 புகார்கள் வந்துள்ளது. அனைத்து புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். வாக்கு மையத்திற்குள் மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும்.
வாக்கு மையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடைபெறும்.
நாளை மாலை வாக்கு பதிவு முடிவுற்ற பிறகு வாக்கு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். வாக்கு எண்ணும் போது வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் எண்ணுவதற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
0 coment rios: