திங்கள், 3 பிப்ரவரி, 2025

சேலம் மாவட்டத்தில் District level Grievance Redressal committee அமைக்கப்பட்டுள்ளதற்கும், இந்த கமிட்டியின் தலைவராக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி சுமதி அவர்கள் நியமிக்கப்பட்டதற்கும், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெ.மு. இமையவரம்பன் வாழ்த்து மற்றும் பாராட்டு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாவட்டத்தில்  District level Grievance Redressal committee அமைக்கப்பட்டுள்ளதற்கும், இந்த கமிட்டியின் தலைவராக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி சுமதி அவர்கள் நியமிக்கப்பட்டதற்கும், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெ.மு. இமையவரம்பன் வாழ்த்து மற்றும் பாராட்டு.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்  ஜெ.மு.  இமயவரம்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மகா கனம் பொருந்திய சேலம் மாவட்ட நீதிபதி அம்மா திருமதி சுமதி  அவர்களுக்கு வாழ்த்துகளும்,  நன்றிகளும்.   வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வழக்கறிஞர்களுக்கும்,  நீதித்துறைக்கும் சீராண உறவை பேனுகிற வகையில் கடந்த 2023 ம் வருடம் மகாகனம் பொருந்திய சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய  வழிகாட்டுதல் படி தற்போது சேலம் மாவட்டத்தில்  District level Grievance Redressal committee அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி அம்மா  அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 
இந்த கமிட்டியின் உறுப்பினர்களாக கனம் C.J.Mஅவர்களும்,  மாவட்ட அரசு வழக்கறிஞரும்,SBA தலைவரும், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவரும்,  ஆத்தூர்,  ஓமலூர் , வாழப்பாடி,  மேட்டூர்,  சங்ககிரி, எடப்பாடி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமித்த மாவட்ட நீதிபதி அம்மா திருமதி சுமதி அவர்களுக்கு நன்றிகள் என்றும் நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தனது மனமார்ந்த  வாழ்த்துகள் என்றும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு இமையவரம்பன் தெரிவித்துள்ளார். 
மேலும் இனி சேலம் மாவட்டத்தில் உள்ள எந்த வழக்கறிஞருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடனடியாக   உறுப்பினர்கள் முன்னின்று தீர்த்து வைப்போம் என்றும் SDCBA தலைவர் ஜெ.மு. இமையவரம்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: