சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் வெள்ளி கொலுசு சங்க பெயர்களை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் நலச் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சேலம் பனங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினைகளை மையப்படுத்தி சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் நலச் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அந்த சங்கத்தின் தலைவராக ஸ்ரீ ஆனந்த ராஜன் மற்றும் நிர்வாகிகள் அதில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சங்கத்திற்கு சொந்தமாக வெள்ளி மாளிகை ஒன்றும் பனங்காடு பகுதியில் இயங்கிக் கொண்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்காக வந்திருந்தனர்.
அந்த மனுவில் கடந்த இரண்டாம் தேதி சிவதாபுரம் பகுதியில் தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர்கள் பொதுநல சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு சங்கங்கள் அந்த சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இந்த நிகழ்ச்சியில் வெள்ளி கொலுசுக்கு சம்பந்தம் இல்லாத சேலம் குகை பாதியை சேர்ந்து ஜெகன் என்பவர் தலைமையில் பதிவு பெறாத போலீஸ் சங்கங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்த சங்கங்கள் செயல்பட்டு வருவதாகவும் அந்த சங்கங்களை தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர் பொதுநல சங்கத்தின் அறிக்கை மூலம் கூறப்பட்டுள்ளது. மேலும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை வளர்ச்சி சங்கம் என்ற பெயரில் தலைவராக உள்ள ஆனந்த ராஜன் என்ற எனது பெயரை போலியாக பயன்படுத்தி தங்களது பகுதியில் உள்ள சங்கத்தின் பெயரை உற்பத்தியாளர்கள் மத்தியில் கெடுக்கும் நோக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மன உளைச்சல் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆகவே எங்களது சங்கப் பெயரை பயன்படுத்துவதை தடுத்து சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனதில் குறிப்பிட்டிருந்தனர்.
0 coment rios: