சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற வீசிக சேலம் நாமக்கல் மண்டல விசிக செயலாளர் வழக்கறிஞர் இமயவரம்பன் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக காவல்துறைக்கு எதிராகவும் கடுமையான உரைவீச்சு.
புதுக்கோட்டை மாவட்டம்
வேங்கை வயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழக முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இரண்டு வருடங்களை கடந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டறியாத தமிழக அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிபிசிஐடி காவல் துறையினர் மூன்று நபர்களை குற்றவாளிகள் என அடையாளம் காட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்பதற்காக வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் விடுதலை சிறுத்தை கட்சியினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் பகுதியில்
வேங்கை வயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாத திமுக அரசை கண்டித்தும், வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் வடக்கு மாவட்ட விசிக செயலாளர் காஜா மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சேலம் நாமக்கல் மாவட்ட மண்டல செயலாளர் வழக்கறிஞர் இமயவரம்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் வளரும் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் தமிழக காவல்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் நாமக்கல் மண்டல செயலாளர் வழக்கறிஞர் இமயவரம்பன் பேசுகையில், வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக சட்டப்படி நீதி கேட்டு தங்களது அமைப்பு போராடி வருவதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று தமிழக அரசுக்கும் தங்களது கட்சிக்கும் நன்கு தெரியும் என்று குறை கூறிய அவர், சட்டப்படி நீதி கேட்டு வேங்கை வயல் மக்களின் நலன் கருதி போராடி வருவதாகவும், வேங்கை வயல் மக்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் இரா திருமாவளவன் காலகட்டத்தில் என்ன நடந்ததோ அதனை மேற்கொள்ள செய்து விடாதீர்கள் என்று காவல்துறையினருக்கு குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியது ஆர்ப்பாட்டத்தின் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: