சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் மௌனம் கலைக்கிட வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தல்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 24 மணி நேர தர்ணா போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திருமதி செல்வராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும் அதை நிறைவேற்ற மருத்துவர் தமிழக அரசின் போக்கை குறித்தும் கண்டன உரையாற்றினார். மேலும் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் வருவாய் கிராம உதவியாளர் ஊர் புற நூலகர் எம் ஆர் பி செவிலியர்கள் PPP & COE உள்ளிட்ட சிறப்பு காலம் வரை ஊதியம் தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலம் வரை ஊதியமும் சட்டபூர்வ ஓய்வூதியமும் வழங்க வேண்டும் மற்றும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கு காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த தர்ணா போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க துணை தலைவர் அர்த்தனாரி சிஐடியு மாவட்ட தலைவர் உதயகுமார் ஏ ஐ ஐ இ எ பொதுச்செயலாளர் ஆனந்த் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில துணை தலைவர் சுகுமார் கலந்து கொண்டனர்.
0 coment rios: