ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று (பிப்ரவரி 10ம் தேதி) முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.
எனவே, மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் உள்ளிட்ட அனைத்து குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: