சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர், பெண் உதவி பொறியாளர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். ஜான் என்பவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என பெண் உதவி பொறியாளர் ஆதாரங்களுடன் விளக்கம்.
சேலத்தை அடுத்துள்ள நிலவாரப்பட்டி பகுதியை சார்ந்தவர் ஜான்.டி.செல்வா. இவர் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் உதவி பொறியாளராக திருமதி சாந்தி என்பவரும் பணியாற்றி வருகிறார். நிலவாரபட்டி பகுதியை சேர்ந்த வணிக பிரிவு ஆய்வாளர் ஜான்.டி.செல்வா தனது பணி தகுதி என்ன என்பதை மறந்து ஒரு அலுவலக உதவியாளரைப் போல பீரோவை துடைப்பது மேஜையை துடைக்க வைப்பது, அது மட்டுமல்லாமல் வாகன ஓட்டியாக பயன்படுத்துவது போன்ற சில்லறைத்தனமான பணிகளை மேற்கொள்ள வைத்து அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல், இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட தன்னிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று அதே அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு என்று சம்பந்தப்பட்ட பெண் உதவி பொறியாளர் அவர்களிடம் விடுமுறை கடிதம் அளித்த போது அவர் அந்த கடிதத்தை உதாசீனப்படுத்தி மேலதிகாரியை பாருங்கள் என்னால் தங்களுக்கு விடுமுறை அளிக்க முடியாது என்று கூறி அந்த கடிதத்தை முகத்தில் விட்டெறிந்ததாகவும் கூறிய மின்வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ஜான் செல்வா தனது மனைவியின் மருத்துவ விடுமுறையை முடித்து தொடர்ந்து பணியாற்ற அலுவலகம் வந்த போது சம்பந்தப்பட்ட பெண் உதவி பொறியாளர் திருமதி சாந்தி அவர்கள் தனது விடுமுறையை ஏற்காமல் தற்பொழுது வரை இன்றைய நாள் வரை தன்னை பணியில் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த இரண்டு மாத காலங்களாக மாத ஊதியம் இல்லாமல் தனது குடும்பம் மிகுந்த மன உளைச்சலிலும் சாப்பாட்டிற்கு வழி இல்லாமலும் வாழ்ந்து வருகின்றோம் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பை எடுத்து இந்த புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் திருமதி சாந்தி அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜான் D செல்வா என்பவர் தன் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும் மருத்துவ விடுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானது ஆனால் வணிக ஆய்வாளர் விடுப்பு என்று எடுத்தால் குறைந்தபட்சம் 200 நாட்களில் இருந்து 375 நாட்கள் வரை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விடுப்பு எடுக்கக் கூடியவர் என்று பல்வேறு ஆதாரங்களை முன் வைத்தார் திருமதி சாந்தி அவர்கள். இதுபோன்று நீண்ட நெடிய விடுப்பு எடுத்து பணிக்கு திருப்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்ற ஒப்புதல் கடிதம் பெற்று அலுவலகத்தில் தந்த பிறகு பணிக்கு திரும்ப முடியும். ஆனால் ஜான் D செல்வா என்பவர் சம்பந்தப்பட்ட காவல்துறை கடிதத்தை வழங்காமல் தற்போது வரை பணிக்கு திரும்பாமல் இருப்பது என்ன காரணம் என்று பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியாது என்று கூறிய அவர், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஓட்டுனராக இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட அவர் பதவி உயர்வு அடிப்படையில் வணிக ஆய்வாளராக தற்பொழுது பணியாற்றி வருகிறார் ஆனால் அந்த பதவிக்கு உண்டான பணியை அவர் இதுவரை செய்ததே இல்லை என்று குற்றம் சாட்டியதுடன், ஒரு திட்டத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் அதற்கான திட்ட மதிப்பீடு இதுவரை அவர் தயார் செய்து கொடுத்ததில்லை என்றும் மாறாக களப்பணியை இதுவரை செய்யவில்லை என்றும் விளக்கமளித்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பணியில் இருக்கும் போதே அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு எங்கேயாவது சென்று படுத்துக் கொள்வார் என்றும் பணி விஷயமாக அவரை அழைக்கும் போது அந்த அழைப்புக்கு தற்பொழுது வரை உரிய மதிப்பு அளித்ததே இல்லை என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இறுதியாக பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் மீது எனது அதிகாரத்திற்கு உட்பட்டு துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே அவர் மீது தான் எடுத்ததாகவும் ஆனால் அவர் விடுப்பு முடிந்து ஏன் தற்பொழுது வரை பணிக்கு வரவில்லை என்பது தங்களுக்கு தெரியாது என்றும் தனது ஆதங்கத்தை திருமதி சாந்தி வெளிப்படுத்தினார். இதே போல அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகளும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 coment rios: