சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் பனங்காட்டில் வெள்ளி கொலுசு உற்பத்தி பணியை நபார்டு வங்கி அதிகாரிகள் பார்வையிட்டு சிறப்பித்தனர்.
சேலம் பனங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் வெள்ளி கொலுசு உற்பத்தியகங்களுக்கும், சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் சங்க விற்பனை மையத்திற்கும் வருகை புரிந்து, பார்வையிட்டு சிறப்பித்தனர். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் விற்பனை மையத்திற்கு
Dr.P.S.ஹரிகிருஷ் நபார்டு வங்கியின் தமிழ்நாடு பொது மேலாளர் Dr.ஹரி கிருஷ்ணராஜ், மண்டல மேலாளர் சந்தானம் மற்றும் மண்டல துணை மேலாளர்கள் தமிழக அனைத்து மாவட்ட பொது மேலாளர்கள் வருகை தந்து வெள்ளி கொலுசு உற்பத்தி பணியை பார்வையிட்டு சிறப்பித்தனர்.
வருகை தந்த அனைவரையும்
சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்கம் சார்பில் தலைவர்
ஆனந்தராஜன் அனைவரையும் வரவேற்றார்.
மேலும் வருகை தந்த நபார்டு வங்கியின் தமிழ்நாடு பொது மேலாளர் அவர்களிடம்
சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர்
முனியப்பன், துணைத் தலைவர்
முருகேசன் மற்றும் வெள்ளி மாளிகை மேலாண்மை இயக்குனர் நந்தகிரண்
ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: