S.K. சுரேஷ்பாபு.
சேலம் பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகள்.
சேலம் ஜாகிர் அம்மா பாளையத்தை சார்ந்தவர் இஸ்மாயில் ராஜா. இவர்களது மகன்கள் முகமது ரோஷன் மற்றும் முகமது அலி. இவர்கள் இருவரும் சேலம் குரங்கு சாவடி அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள சர்வதேச தனியார் ( ARISE ) பள்ளியில் மூத்த மகன் +1ம், இளைய மகன் 8-ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இளைய மகன் அகமது அலி தனது பள்ளியில் உள்ள தொலைக்காட்சி பெட்டியினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி உடைத்துள்ளார். இதன் காரணமாக அந்த குற்றச்சாட்டை முன்வைத்து மகன்கள் இருவரையும் பள்ளி நிர்வாகத்தினர் கல்வி இடைநீக்கம் செய்துள்ளதாகவும் இது தொடர்பாக பள்ளிக்கு சென்று கேட்ட போது பல்வேறு காரணங்களை கூறி தங்களை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டி சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் பெற்றோர்கள் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகத்திடம் கேட்டபோது, அகமது அலி தனது பள்ளியில் உள்ள தொலைக்காட்சி பெட்டியினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி உடைத்து விட்டதாகவும், தனது மகன் மீது பள்ளி நிர்வாகம் எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று பெற்றோர் தரப்பில் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மகன்களில் பள்ளிக்கான கல்வி தொகை மற்றும் பள்ளியின் தொலைக்காட்சியை உடைத்ததற்காகவும் உண்டாகும் செலவை தாங்கள் செலுத்த எங்களுக்கு காலதாமதம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட பெற்றோர்கள். பள்ளியில் தொலைக்காட்சி பெட்டி உடைத்த பிறகு சம்பந்தப்பட்ட இருவரும் பள்ளிக்கு அவர்கள் வரவே இல்லை என்று கூறிய பள்ளி நிர்வாகத்தினர், ஒரு கட்டத்தில் இரண்டு மகன்களுக்கும் உண்டான பருவ கட்டணங்களை கட்ட தவறிய அவர்கள் தொலைக்காட்சி பெட்டி உடைத்ததற்கான தொகையும் கொடுக்காமல் தங்களது மகன்களை சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து தங்கள் விளக்கிக் கொள்வதாக கூறி அதற்கான விளக்க கடிதத்தையும் கொடுத்து கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி அதற்கான விலகல் கடிதத்தையும் சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து மகன்களுடன் பெற்றோர்கள் பெற்று சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பள்ளிக்கான பருவத்தொகையையும் செலுத்தவில்லை சேதப்படுத்தப்பட்ட தொலைக்காட்சி பெட்டிக்கு உண்டான தொகையையும் செலுத்தவில்லை மாறாக பள்ளியில் அவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கு சென்ற பிறகு எத்தனை நாள் கழித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைப்பது என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை என்றும் யாருடைய தூண்டுதலின் பேரிலேயே நேற்றைய சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய பள்ளி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரின் செயல்பாடுகள் அனைத்தும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்ணியத்திற்கு எதிராகவும் இருந்த போதும் கூட சம்பந்தப்பட்ட இருவரையும் பள்ளி நிர்வாகம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தங்களது விளக்கத்தை முன்வைத்தனர். பெற்றோர்களே முன்வந்து மகன்களின் மாற்றுச் சான்றிதழை பள்ளியில் இருந்து பெற்றுச் சென்ற நிலையில் தங்களது பணி நிர்வாகத்தின் மீது எந்த விதத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை என்றும் தங்களது வேதனையை வெளிப்படுத்தியது அரைஸ் சர்வதேச பள்ளி நிர்வாகம்.
0 coment rios: