இதற்காக, மாநகராட்சியில் உள்ள வரி வசூலிப்பு மையங்கள் விடுமுறை நாட்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி பே, போன் பே ஆகிய செயலிகள் மூலமாகவும் வரிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 400 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களும் வரி வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு 'சீல்' வைப்பு போன்ற நடவடிக்கைகளும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல் செய்யும் பணி நேற்று தொடங்கி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது. ஈரோடு மாநகராட்சியில் தினசரி ஒரு வார்டு வீதம், மொபைல் வாகனம் மூலம் வரி வசூலிக்கப்படும். வரி செலுத்துவோருக்கு, வாகனத்திலேயே ரசீதும் வழங்கப்படும். பொதுமக்களின் வீட்டுக்கே சென்று வரி வசூலிப்பதால், அவர்களுக்கான நேரம் மிச்சப்படுகிறது என்றனர்.
0 coment rios: