ஒவ்வொரு இந்தியனும் மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு மொழியை படிக்கணும். இதில் என்ன தவறு இருக்கிறது. நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மூன்றாவது மொழி கட்டாயம் தேவை என பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் ஈரோட்டில் பேச்சு..!
ஈரோடு தெற்கு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு சித்தோடு மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது .
ஈரோடு பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வடக்கு மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில்குமார், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் கோகுலகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து விளக்கி பேசினார்,
பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை 11 நிதி நிலை அறிக்கைகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தந்திருக்கிறார்.
இந்த பதினோரு நிதிநிலை அறிக்கைகளில் ஒரு நிதிநிலை அறிக்கை கூட தேர்தலுக்கான நிதி நிலை அறிக்கை கிடையாது. திமுகவை போல் ஒவ்வொரு தேர்தலுக்குமான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல், 2042 ல் சுதந்திர நூற்றாண்டை கொண்டாடுகிறபோது.
இந்தியா வல்லரசு நாடாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் பாரத பிரதமரின் லட்சியம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களே வரவேற்கின்ற தலைவராக நமது பாரத பிரதமர் விளங்கி வருகிறார். உலக நாடுகளில் பல்வேறு நாடுகளுக்கு உதவுகின்ற நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
மோடி அவர்களை கெட் அவுட் மோடி என்று போட்டால் நான் கெட் அவுட் ஸ்டாலின் என்று போடுவேன் என போட்டதில் ஆறு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கெட்டவள் ஸ்டாலின் என பதிவிட்டுள்ளனர்.
இங்கு அமர்ந்துள்ள மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில், மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் மூன்றாவது மொழி ஹிந்தி படிக்க வேண்டும் என எங்கேயாவது கூறியுள்ளதா.? என்ற கேள்வியை கேளுங்கள்.
ஒவ்வொரு இந்தியனும் மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு மொழியை படிக்கணும். இதில் என்ன தவறு இருக்கிறது, நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மூன்றாவது மொழி கட்டாயம் தேவை என்பதுடன், மத்திய அரசு கொடுக்கின்ற நிதியை திருடி பதுக்கி வைத்து கொண்டு, வருகின்ற சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, கல்விக்கான நிதியை இந்த திமுக அரசு கேட்கிறது என குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் நின்னதுக்கே ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கினர். முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முட்டாள் என கலைஞர் கூறியதாக நினைவு கூர்ந்த கேபி ராமலிங்கம், மேலும் கூறுகையில், இதுவரை மத்திய அரசிடம் இருந்து பெற்ற விதிக்கான கணக்குகளை மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை என்பதுடன், துறை வாரியாக கடந்த ஆண்டுகளில் மத்திய அரசால் கொடுக்கப்பட்ட நிதிக்கான முழுமையான அறிக்கையை கொடுக்க வேண்டும்.
திமுகவை எதிர்ப்பவர்கள் தனித்தனியாக பிரிந்து நிற்கின்றனர் என மிகவும் ஆணவமாக கணக்கு போடுகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள், சொத்துக்கள், தமிழக அரசிடம் தற்போது ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் சம்பாதித்த பணத்தை நாட்டுடைமையாக்க தெரியாதா? இது மிக மிக விரைவில் நடைபெறும் என்றார்.
0 coment rios: