சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் 2-நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். கிழக்கிந்திய கம்பெனியை போல இந்திய பார் கவுன்சில் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விடும். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் குற்றச்சாட்டு.
இந்திய பார் கவுன்சில் மத்திய அரசுக்கு வழக்கறிஞர்களுக்கு எதிராக உள்ள சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை வலியுறுத்தி தமிழகம் உட்பட நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பிலும் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து SDCBA தலைவர் இமயவரம்பன் அவர்கள் சங்க நிர்வாகிகள் கண்ணன் உள்ளிட்டோருடன் கூறுகையில், இந்திய சட்டம் பயின்றவர்கள் இந்திய பார் கவுன்சிலில் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினராக அனுமதித்தவர்கள் மட்டுமே நீதிமன்றங்களில் பணியாற்ற முடியும்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள லண்டன் ஆஸ்திரேலியா அமெரிக்கா LAW FORM வாயிலாக அங்கு இருந்தபடியே வழக்கறிஞர்கள் இந்தியாவில் ஜூம் மீட்டிங் வாயிலாக வழக்கு நடத்திக் கொள்ளலாம். இதன் காரணமாக இந்திய வழக்கறிஞர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளவர்கள். இந்திய வழக்கறிஞர்கள் வழக்காடிகளுக்காக குறைந்த கட்டணத்தில் வழக்காடி வருகின்றோம். இந்த புதிய சட்ட மசோதாவின் காரணமாக ஆரம்ப காலகட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனி எப்படி இந்தியாவை எப்படி ஆக்கிரமித்ததோ பின்பு அவர்கள் வைத்தது தான் சட்டம் என்றாகும் என்றது போல அவர்கள் கொண்டு வரும் புதிய சட்டங்கள் இந்திய அரசு கொண்டு வந்து விடும் என்ற நிலை உள்ளது. இது போன்ற அம்சங்களை எதிர்த்து தான் இந்திய வழக்கறிஞர்கள் தங்களது பாதுகாப்பிற்காக போராட்டத்தை நடத்தி வருவதாகவும், புதிய மசோதாவால் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை கருதி போராட்டம் நடத்தினாலும் கூட கண்டம்ட் ஆப் தி கோர்ட் நடவடிக்கை எடுத்து போராடும் வழக்கறிஞர்களை விடுவித்து விடலாம் என கூறப்படுகிறது. இது இந்திய அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கிய உரிமையை பறிப்பதாக உள்ளது என்று SDCBA தலைவர் இமயவரம்பன் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கஞ்சர்களின் இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
0 coment rios: