தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தென்னக காசி காலபைரவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த ராட்டைச் சுற்றி பாளையத்தில் தென்னக காசி காலபைரவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 39 அடி உயர காலபைரவர் சிலை நுழைவு வாயிலாக கொண்டுள்ளது. அதேபோல் கோயிலை சுற்றிலும் 64 கால பைரவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பம்சமாக எங்கும் இல்லாத வகையில் பக்தர்கள் மற்றும் பெண்கள் கருவறைக்குள் சென்று சிலையை தொட்டு வணங்கி பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
தென்னக காசி காலபைரவர் கோயில் ஆன்மீகக்குரு விஜய் சுவாமிஜி தலைமையில் தினசரி காலை மற்றும் மாலை இருவேளைகளில் காலபைரவருக்கு ஸ்வர்ணஷாசன பைரவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை மற்றும் சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் காலபைரவருக்கு உகந்த நாளான தேய்பிறை அஷ்டமி நாளில் பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் கருவறைக்குள் உள்ள காலபைரவர் சொர்ணகாசன பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தென்னக காசி காலபைரவர் கோயிலில் இருவேளை பாலாபிஷேக பூஜை நடைபெற்றது. ஆன்மீகக்குரு விஜய் சுவாமிஜி தலைமையில் பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஈரோடு மட்டுமல்லாமல் திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
0 coment rios: