S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் பழைமை வாய்ந்த தர்காவில் வரலாற்று சிறப்புமிக்க மினாரா அமைப்பு. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் இஸ்லாமியர்களுக்கு அர்ப்பணித்து ஏழை எளியவர்களுக்கு நல உதவி.
சேலம் லைன்மேடு பென்சனர்ஸ் லைன் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மினாரா என்று அழைக்கப்படும் உயரமான தூபி அமைக்கப்பட்டது. இதன் அர்ப்பணிப்பு விழாவிற்கு தர்காவில் முத்தவல்லி அப்சல் செரிப் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், திமுக பொது குழு உறுப்பினர் நாசர் என்கின்ற அமான்கான் மற்றும் சேலம் ஜாமியா மசூதியின் முத்தவல்லி அன்வர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு வரலாற்று சிறப்புமிக்க மினராவை இஸ்லாமியர்களுக்காக அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தர்காவின் நிர்வாகிகள் பேசும்போது சேலத்தில் மிகவும் பழமை வாய்ந்த இந்த தர்காவில் மினாரா அமைக்க முயற்சிக்கும் போது ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளுக்கு இடையே அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி தற்பொழுது இஸ்லாமியர்களுக்காக அர்ப்பணித்து வைத்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களை வெகுவாக பாராட்டி புகழாரம் சூட்டினார்.
அமைச்சர் ராஜேந்திரன் விழாவில் தனது சிறப்புரையில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்களுக்கு அவர்களின் நலன் கருதி கலைஞர் கருணாநிதி அவர்களும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டு பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் தொப்புள் கொடி உறவாக இருக்கும் என்று கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.
தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஏழை எளிய பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த விழாவில் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன் உட்பட தர்கா நிர்வாகிகள் திமுக பிரமுகர்கள் அந்த பகுதியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: