சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா..
இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில் கூறும் போது, சேலத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் 119 ஏக்கரில் 880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 50 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் 7000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திருமணிமுத்தாறு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அந்த நீரை ஜவுளி பூங்காவிற்கு பயன்படுத்தப்படும்.
ஜவுளி பூங்கா மூலம் ஆண்டுக்கு ரூ.7000 கோடிக்கு ஜவுளி உற்பத்தி நடக்கும். இதில் 75 சதவீதம் ஏற்றுமதியும், 25 சதவீதம் உள்ளூர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றார்.
இதில் திருமணிமுத்தாறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது
ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா மூலம் சேலத்தில் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும்.
ஏற்றுமதி வசதிக்காக சேலம் விமான நிலையம் விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது என்றார் ஜவுளி பூங்கா சேலத்தில் செயல்பட தொடங்கி விட்டால் இரும்பாலை போல மிகப்பெரிய ஒரு நிறுவனமாக இது மாறும் என்றும் சேலத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிறுவனமாக உருவாகும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
0 coment rios: