சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் விசிக பிரமுகர்களால் மிகப் பெரிய பொருட்டு அளவில் வடிவமைக்கப்பட்ட சுவர் விளம்பரம் சேதம் செய்த விவகாரம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் விசிக உட்பட இரும்பு கரம் கொண்டு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் திருமதி காயத்ரி முக்கிய நிர்வாகிகளுடன் COP அலுவலகத்தில் புகார் மனு.
சேலம் வடக்கு மாவட்ட விசிக சார்பில் சேலம் மணல்மேடு மற்றும் பாரதி வித்யாலயா பள்ளி இடைப்பட்ட பகுதியில் மிகப்பிரமாண்டமான அளவில் அதிகப்படியான பொருட்செலவில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் விசிக மாநகர் மாவட்ட துணை செயலாளர் திருமதி காயத்ரி ஆகியோர்களது புகைப்படங்களை மையப்படுத்தி சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரத்தில் உள்ள தொல் திருமாவளவன் மற்றும் திருமதி காயத்ரி ஆகியோரது உருவப்படங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சேலம் மாநகர் மாவட்ட விசிக துணை செயலாளர் திருமதி காயத்ரி என்ற பெயரையும் வெள்ளை பூச்சால் அளித்துள்ளனர்.
இந்த புகார் சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக பல்வேறு பரபரப்பு சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அந்த விளம்பரத்தை வெளிப்படுத்திய நபர்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இதனை அடுத்து சேலம் மாநகர் மாவட்ட விசிக துணைச் செயலாளர் திருமதி காயத்ரி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன்சேலம் மாநகர காவல் துறை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்.
இது குறித்து குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலாளர் பாவேந்தன் நம்மிடையே கூறுகையில், தங்களது கட்சியின் வளர்ச்சியை பிடிக்காமல் சிலர், அது யாராக தங்களது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளாக மட்டுமே இருக்கட்டும், தங்களது கட்சி நிர்வாகிகள் இது போன்ற செயல்களை செய்ய மாட்டார்கள் என்ற பொழுதும், அவர்கள் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றால், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவிலான மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் விசிக ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் பாவேந்தன்.
மனுவினை பெற்றுக்கொண்ட சேலம் மாநக காவல்துறை ஆணையர் அவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாரபட்சம் பார்க்காமல் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிகளைத்துள்ளார் என விசிக பிரமுகர்கள் புகார் மனு அளித்த பிறகு நம்மிடையே தெரிவித்தனர்.
இந்த புகார் மனு அளிக்கும் நிகழ்வின் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கட்சியினர் என ஏராளமான உடன் இருந்தனர்.
0 coment rios: