S.K. சுரேஷ்பாபு.
மக்கள் சட்ட உரிமைகள் கழகம், மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் சிற்பியின் சிகரம் என்ற நூல் வெளியீட்டு விழா. சேலம் மாநகர மேயர் நூலினை வெளியிட தொழிலதிபர் ஈஸ்வரன் சேகர் பெற்றுக்கொண்டார்.
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் மற்றும் தேசிய தெலுங்கர் சிறுபான்மையின் சமூக கூட்டமைப்பு இணைந்து நடத்திய சிறப்பின் சிகரம் என்ற நூல் வெளியீட்டு விழா வெளியீட்டு விழாவில் மாவட்ட செயலாளர் மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில இளைஞரணி நிர்வாக செயலாளருமான ஆர்.வி. பாபு தலைமை தாங்கினார். தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு நிறுவன தலைவர் ஆர் நாகா. அரவிந்தன் முன்னிலை வகித்தார். புதிய சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் சுமதி ஸ்ரீ, தேசிய சமூக நல மகளிர் இயக்க தலைவி புஷ்பா மாண்பாண்டியன், பேராசிரியர் ரேஷ்மா, வழக்கறிஞர் பொன்முடி, ஓ டெக்ஸ் எம்ஏ இளங்கோவன் ஆகியோர் குற்றவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
கோவை சுந்தரம் அவர்கள் எழுதிய சிறப்பின் சிகரம் நூலை மாநகர மேயர் ஆ. இராமச்சந்திரன் வெளியிட நூலை சேலம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழக வர்த்தக அணி அமைப்பாளர் தொழிலதிபர் ஈஸ்வரன் சேகர் பெற்றுக்கொண்டார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் ஓசோ. முரளி, முத்து மாரய்யன், கோல்டு கண்ணன், வழக்கறிஞர் ஜெயக்குமார், வழக்கறிஞர் சல்மான், வழக்கறிஞர் தனபால், வழக்கறிஞர் சோழன், மான்பாண்டியன், கல்பனா, ஜமுனா ராணி, ஹேமலதா, சுதந்திரராசு, குகன், காளி தங்கதுரை, பார்வதி, ராஜா, ஏரிக்கரை மணிகண்டன், நிகழ்வில் முனைவர் ராஜா நன்றி கூறினார்.
0 coment rios: