சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தின் மிகப்பெரிய உயரமான மற்றும் முதல் 360 டிகிரி தரை பிரமாண்ட கிரிக்கெட் மைதான திறப்பு விழா.
சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிநவீன புள்தரைகளை கொண்ட சிறிய அளவிலான கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், கேம் ஆப் சொல்யூஷன் என்ற அமைப்புடன் இணைந்து சேலம் மாமாங்கம் பகுதி அருகே உள்ள ஊத்து கிணறு அருகே, சேலத்தின் மிகப்பெரிய உயரமான மற்றும் முதல் 360 டிகிரி நவீன வசதியுடன் கூடிய பிரமாண்ட கிரிக்கெட் மைதான திறப்பு விழா நடைபெற்றது. மைதான உரிமையாளர்கள் அரிமா. எஸ்பி மணி, அருண் மற்றும் வெங்கடேஷ் ஆகியவரது முன்னிலையில் நடைபெற்ற திறப்பு விழாவில் சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தில் துவக்கி வைத்தார்.
மேலும் பேட்டிங் செய்தும் பவுலிங் வீசியும் கிரிக்கெட் மைதான உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உற்றார் உறவினர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து சேலத்தில் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள இந்த 360 டிகிரி போன்ற கிரிக்கெட் மைதானத்தின் சிறப்பு அம்சங்களை குறித்து கூறிய மைதான உரிமையாளர் அருண், திறப்பு விழா சலுகையாக பிப்ரவரி மாதம் வரை ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விளையாடுவதற்கான தொகை சற்று அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய இந்த மைதானத்தில் இனிவரும் காலங்களில் கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பகல் நேரங்களை போலவே இரவு நேரங்களிலும் பிரகாசிக்கும் வகையில் அதிநவீன எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டு இருளை பகலாக்கும் வகையில் இந்த பிரமாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாக பெருமமிதம் தெரிவித்தார்.
துவக்க விழாவில் நிறுவன உரிமையாளர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
0 coment rios: