வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் புதிய அறக்கட்டளை துவக்கம். ஏழை எளியவர்களுக்கு உதவும் நோக்கில் துவங்கியுள்ளதாக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தகவல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் புதிய அறக்கட்டளை துவக்கம். ஏழை எளியவர்களுக்கு உதவும் நோக்கில் துவங்கியுள்ளதாக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தகவல். 

சேலம்  பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் தெய்வலிங்கம். இவர் 9-வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினராகவும், இலவச அமரர் ஊர்தி சேவை உள்ளிட்ட ஏராளமான நற்பணிகளை செய்து வருகின்றார். பன்முகம் கொண்ட இவரது பொதுநல சேவைக்கு முத்தாய்ப்பாக அறக்கட்டளை ஒன்றையும் துவக்கி உள்ளார். தெய்வா என்ற பெயரில் புதிய அறக்கட்டளை துவக்கி உள்ள மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம்,  இரண்டாம் நாள் நிகழ்வாக, பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் அருகே ஏழை எளியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் அக்ஷயா டிரைவிங் பள்ளி உரிமையாளர் நந்தகுமார் அவர்களது திருமணநாளை முன்னிட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் நிறுவனரும் வழக்கறிஞரும் மற்றும் மாமன்ற உறுப்பினருமான தெய்வலிங்கம் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் வழக்கறிஞர் மற்றும் மாமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, ஆதரவற்ற சடலங்களை மீட்டு நல்லடக்கம் செய்து வருவதோடு, தன்னலம் பாராமல் பொது நலனுக்காக பல்வேறு சேவையில் செய்து வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக தெய்வா என்ற பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்கியுள்ளதாகவும் இதன் மூலமாக தடையில்லாமல் ஏழை எளிய நலிவடைந்த மற்றும் அடித்தட்டு மக்களுக்கு எல்லா வகையிலும் உதவும் வகையில் இந்த சேவையை தொடங்கியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் தெய்வலிங்கம் உட்பட குடும்பத்தார் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: