சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஓய்வு பெற்ற அதிகாரிகளை குறிவைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த ஆன்லைன் வர்த்தக இடைத்தரகர்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார்.
சேலம் சின்ன திருப்பதி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான இவர், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும், மத்திய மாநில அரசு எஸ்சி எஸ்டி பிரிவு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான சரஸ்ராம் ரவி அறிவுறுத்தலின் பேரில், சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளிப்பதற்காக தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார், அந்த மனுவில் தன்னிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தின் இடைத்தரவர்களாக பணியாற்றுவதாக கூறி, பணம் முதலீடு செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக பெற்றதாகவும், பிறகு அதற்கான ரசீது மற்றும் முதலீடு பத்திரம் பெறாமல் ஏமாற்றி வந்தனர் என்றும் சம்பந்தப்பட்ட இருவரும் சேலம் நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓய்வு பெற்ற பணம் வைத்திருக்கும் அரசு ஊழியர்களை குறி வைத்து வீட்டிற்கு சென்று வலுக்கட்டாயமாக பல லட்சம் பணத்தை மோசடி செய்து வந்ததை அறிந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான சரஸ்ராம் ரவி செய்தியாளரிடம் கூறுகையில்
சம்பந்தப்பட்ட இருவரும் இது போன்று பல ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் கோடி கணக்கில் பண மோசடி செய்துள்ளதாகவும் தற்போது சேலம் மத்திய குற்ற பிரிவில் அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் வாயிலாக அவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
0 coment rios: