S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் செயின்ட் ஆண்டனி மின்னொளி கால்பந்து போட்டி. தமிழக அளவில் 38 அணியில் பங்கேற்பு.
சேலம் ஏற்காடு அடிவாரப் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியினை தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், மத்திய மாநில பொதுத்துறை எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சரஸ்ராம் ரவி துவக்கி வைத்த இந்த போட்டியில் பங்கேற்ற 38 அணி வீரர்களும் தங்களின் வெற்றிக்காக முனைப்புடன் விளையாடினர்.
நாக்கட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியானது கால் இறுதி அரை இறுதி என இறுதி கட்டத்தை ஏற்றி இருந்தது.
இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட கால்பந்து விளையாட்டு அணி வீரர்கள் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாடியது பரபரப்பையும் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கோப்பையும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரொக்கமும் பரிசு கோப்பையும், மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும் பரிசு கோப்பையும் மற்றும் நான்காம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கோப்பையும் வழங்கி தமிழ்நாடு கோர்ட் நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியை நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் சேலம் மாநகரத்தின் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
0 coment rios: