சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வழக்கறிஞர் சேம நலன் நிதியை ரூபாய் 25 லட்சமாக உயர்த்த கோரி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயிலில் கோரிக்கை ஆர்ப்பாட்டம். திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெ.மு இமயவரம் பன் தலைமையில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், சங்க செயலாளர் முருகன் மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்களின் சேம நல நிதி 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூலக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் பேசுகையில், நம்மில் எத்தனை வழக்கறிஞர் சொந்தமாக குமாஸ்தா வைத்திருக்கிறோம் என்றும் ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஆஜராகும் வழக்கில் குமாஸ்தா கட்டணம் என ரூபாய் 20 நீதிமன்ற வில்லைகள் ஒட்ட வேண்டும். அவ்வாறு ஒட்டப்படும் தொகையை கொண்டு குமாஸ்தாக்கள் காலமானால் இதுவரை வழங்கப்பட்ட ரூபாய் 3 லட்சத்திற்கு பதில் இனி அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் வழங்கப்படும் என்கிற நமது தமிழக அரசின் அரசானையையும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் உத்தரவையும் நாம் வரவேற்கிறோம். அதே சமயம் வழக்கறிஞர் நலனுக்காய் ரூபாய் 120 நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும் என்கிற மாற்றம் சரியா என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் நேற்று வரை வழக்கறிஞர் சேமநலனுக்காக ரூபாய் 30 நீதிமன்ற வில்லை ஒட்டி வந்த நாம் இனி ரூபாய் 120 நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும் என்கிற போது, இதுவரை சேமநலன் நிதி 7 லட்சம் வழங்கப்பட்டது என்றும் இனி ரூபாய் 28 லட்சமாக மாற்ற வேண்டும் என்பது தானே சரியாக இருக்க முடியும். ஆகவே வழக்கறிஞர் சேம நலன் நிதியை ரூபாய் 25 லட்சமாக உயர்த்த கோருவதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக சேலம் மாவட்ட நீதிமன்ற வாயிலில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: