சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திமுகவிலிருந்து வழங்கி தன்னை சிறுத்தையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சேலம் மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளராகவும், தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல்பட்டு வந்தவர் எழில் அரசன். இவர் திமுக ஆட்சி காலங்களில் தலித் கலக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியில் எந்த ஒரு முக்கியத்துவமும் அழிப்பதில்லை. பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை இதற்கு நாங்கள் தயாராகவும் இல்லை எனவும் இனியும் தன்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறி அதற்கான விலகல் கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்துவிட்டு திமுகவிலிருந்து விலகினார்.
இதனை அடுத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் வேலு நாயக்கர் தலைமையில் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் மாஸ்டர் ஆதி தமிழன் பெருமாள் முன்னிலையில் தன்னை அடிப்படை உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்து கொண்டார். விசிகவில் இணைந்த எழில அரசனுக்கு ஆதித்தமிழன் பெருமாள் கட்சி துண்டை அணிவித்தும் நினைவு பரிசை வழங்கியும் வாழ்த்தி வரவேற்றார்.
0 coment rios: