சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மயான கொள்ளை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மன் குறத்தி வேடமிட்டு பக்தர்களின் இல்லங்களுக்கு சென்று அருள் வாக்கு கூறும் நிகழ்வு.
தமிழ் மாதங்களில் வரும் மாசி மாதம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அனைத்து அங்காளம்மன் பெரியாண்டிச்சி மட்டும் பேச்சி அம்மன் ஆலயங்களில் மாசி திருவிழா வெகு விமர்சையாக பக்தர்களை நிரட்சி அடைய வைக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடப்பாண்டிற்கான மாசி திருவிழா சேலத்தில் உள்ள அனைத்து அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயங்களில் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் கி அருள்மிகு ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி மாசி திருவிழா கடந்த 12ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக அம்மன் அங்காள பரமேஸ்வரி குறத்தி வேடமிட்டு பக்தர்களின் இல்லங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது. குறிப்பாக சேலம் தாதகாப்பட்டி பகுதியில் தனது தீவிர பக்தரின் ஈழத்திற்கு சென்ற சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தலைவர் பன்னீர்செல்வம் அம்மனின் வேடம் தரித்து பக்தரின் வீட்டில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு அவர்களுக்கான அருள் வாக்கினை தெரிவித்தார்.
இதனை காண ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர். இதனை எடுத்து மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை பொதுமக்களையும் பக்தர்களையும் மிரள வைத்து மிரட்டி அடையச் செய்யும் நிகழ்வு சேலத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் நிர்வாகிகள் செல்வராஜ் மணிகண்டன் பாலசுப்பிரமணி உள்ளிட்டோ சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: