சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஜான்சன் நகர் மூன்றாவது கிழக்கு தெரு அங்காளம்மன் கோவில் விவகாரம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மேல் முறையீடு செய்ய திட்டம்.
சேலம் மாநகரம் ஜான்சன் பேட்டையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளம்மன் ஆலயம் 3-வது கிழக்குத் தெருவில் உள்ளதுஉள்ளது. விழா நடப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் இந்திராணி ஆகிய இரண்டு தரப்பினர் இடையே கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிரச்சனை இருந்து வருகிறது.
பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை கோவிலை திறந்து விழா நடத்திக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் பிரகாஷ் என்பவர் தரப்பிற்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால் காவல்துறையினர், வட்டாட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை உதாசீனப்படுத்தி மாசி திருவிழாவிற்காக நேற்று முன்தினம் அதாவது 26 ஆம் தேதி திறக்காமல் 27 - ஆம் தேதி
சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது, பிரகாஷ் தரப்பினர் கோவிலை திறக்க விடாமல் தடுத்ததால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனை அடுத்து மனுதாரர் பிரகாஷ் தரப்பினருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் இன்று அதிகாலை காவல்துறையினர் கோவிலை திறந்ததோடு மட்டுமல்லாமல், வலுக்கட்டாயமாக ஒவ்வொருவரின் இல்லத்திற்கும் சென்று வழிபாடு நடத்த அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மனுதாரர் பிரகாஷ் தரப்பினர் கூறுகையில், மகா சிவராத்திரி பூஜைக்காக அன்றைய தினம் காலை திறக்கப்பட வேண்டிய கோவில் திறக்கப்படாமல் இன்று காலை அதாவது 28ஆம் தேதி தங்களுக்கு தெரியாமல் திறந்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்த செயலாகவும் இதனால் தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் கோவிலை திறந்து உள்ளனர் என்று குற்றம் சாட்டிய அவர்கள், விழாவின் முக்கிய நிகழ்வான சிவராத்திரி பூஜை அதனை தொடர்ந்து மயான கொள்ளை இவை அனைத்துமே முடிந்த பிறகு இன்று சிறந்தது எந்த விதத்தில் நியாயம் என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும் மாறாக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவலகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
திருவிழாவை முடிந்த பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் விழாமல் முடிந்த பிறகு கோவிலை திறந்ததுடன் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தது வேடிக்கையாக இருந்தது.
0 coment rios: