சேலம்.
சுரேஷ்பாபு.
சேலத்தில் புராண நிகழ்வை நினைவு படுத்தும் மயான கொள்ளை நிகழ்ச்சி. அம்மனின் வேடம் தரித்த பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளின் ரத்தத்தை பருகி ஆவேச நடனத்துடன் பக்திப்பரவசம்.
தமிழ் மாதங்களில் வரும் மாசி மாதம் அங்காளம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அங்காளம்மனின் பிறப்பிடமாக கருதப்படும் மேல்மலையனூர் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன், பெரியாண்டிச்சி மற்றும் பேச்சாயியம்மன் உள்ளிட்ட கோவில்களில் மாசித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அங்காளம்மனின் புராண நிகழ்வினை நினைவு படுத்து விதமாக நடத்தப்படும் இந்த விழா, நேற்று முன்தினம் சக்தி அழைத்தளுடன் தொடங்கியது.
இதற்காக கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக விரதம் இருந்த பக்தர்கள், அம்மனின் வேடம் தரித்து, அதற்கென்ற பிரத்த்யேக உடையணிந்தும், மயில் இறகுகளால் ஆன அலங்காரங்களுடன், பக்திப்பரவசத்துடன், சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து கோவில்களை விட்டு வெளியே வந்த பக்தர்கள், பம்பை மேள இசைக்கு ஏற்றவாறு, ஆவேசத்துடனும், பரவசத்துடனும் நடனமாடியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் விதமாகவும், மிரட்சியை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.