சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கரூர் வைசியா வங்கியின் புதிய கிளை அலுவலகம் சேலத்தில் இன்று திறப்பு. சேலம் மாநகராட்சி துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் செயல் அலுவலர் அமுதசுரபி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
872 கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் கரூர் வைசியா வங்கி தனது புதிய கிளையினை சேலம் ஏற்காடு பிரதான சாலையில் சேலம் அரசினர் இருபாலர் கலைக்கல்லூரி அருகே துவக்கி உள்ளது. வங்கியின் உதவி பொது மேலாளர் துளசி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சேலம் சேரி ரோடு கிளையின் கிளை மேலாளர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சியும் துணை ஆணையாளர் சுப்ரமணியன், சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் செயல் அலுவலர் திருமதி அமுதசுரபி மற்றும் ரமணி குழுமத்தின் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வங்கியின் புதிய கிளையினை ரிப்பன் பெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் வங்கியில் இருப்பு அறையையும் தொடங்கி வைத்தனர்.
வங்கியின் செயல்பாடுகள் குறித்து உதவி பொது மேலாளர் துளசி கிருஷ்ணமூர்த்தி நம்மிடையே கூறுகையில், பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியின் 7-வது கிளை இன்று துவக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கியில் ஏழை எளியவர்கள் படிக்காதவர்கள் பயன் பெறும் வகையில் அதற்கான ஒரு தனி அலுவலர் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான படிவங்கள் பூர்த்தி செய்வது பணம் எடுத்து தருவது பணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள் என்றும், மற்ற வங்கிகளை போலவே தங்களது வங்கி ஏடிஎம்மில் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசமாகவும் அதன் பிறகு எடுக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கு பணப்பிடிப்பு செய்யப்படும் என்றும் கேவிபி வங்கி ஏடிஎம்மில் ஒரு நாளில் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அதேபோல தங்களது வங்கி ஏடிஎம் - ல் பணம் செலுத்தும் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். அது மட்டும் இல்லாமல் வங்கியில் வைப்புத்தொகை செலுத்தும் போது பொதுவானவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக அரை சதவிகிதம் வட்டி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த வங்கியின் துணை பொது மேலாளர் தங்களது வங்கி சேவையை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் வங்கியின் கிளை மேலாளர் வெங்கடேஷ்வரன் உட்பட சேலம் மாநகரின் தொழிலதிபர்கள் வாடிக்கையாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
0 coment rios: