சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஜான்சன் பேட்டையில் திருவிழா சம்பந்தமாக கோவிலை திறக்க நீதிமன்ற உத்தரவை அவமதித்த அரசு துறை அதிகாரிகள். காலம் தாழ்த்தி கோவிலை திறக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு ஊர் மக்கள் கோவிலிலை திறக்க விடாமல் தடுத்ததால் பெரும் பரபரப்பு பதற்றம்.
சேலம் மாநகரம் ஜான்சன் பேட்டையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த கோவின் உரிமை மற்றும் விழா நடப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் சூர்யா ஆகிய இரண்டு தரப்பினர் இடையே கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த 10 ஆண்டுகளாக கோவில் திறக்கப்படாமல் திருவிழாவும் நடத்தப்படாமல் இருந்த
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் நடைபாண்டு மாசி திருவிழா நடத்துவது தொடர்பாக கோவிலை திறக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை கோவிலை திறந்து விழா நடத்திக் கொள்ள பிரகாஷ் என்பவரின் தரப்பிற்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால் காவல்துறையினர், வட்டாட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை அவமதித்ததோடு மட்டுமில்லாமல், எதிர்தரப்பினரான ஷங்கருக்கு ஆதரவாக, மாசி திருவிழாவிற்காக நேற்று அதாவது 26 ஆம் தேதி திறக்க வேண்டிய கோவிலை நேற்று திறக்காமல் இன்று திறப்பதற்காக காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது கோவிலை திறந்து விழா நடத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் கோவிலை திறக்க வராத அதிகாரிகள் இன்று திறப்பதா என்று கூறி கோவிலில் திறக்க விடாமல் தடுத்ததால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மாசித் திருவிழா என்பது சிவராத்திரி பூஜையுடன் தொடங்கி அடுத்த நாள் மயான கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நடத்துவது வழக்கம் என்றும் ஆனால் அதிகாரிகள் தரப்பில் சிவராத்திரி பூஜை நடத்த விடாமல் இன்று வந்து பிறப்பது பலன் இல்லை என்ற காரணத்தினால் கோவிலை நாங்கள் சிறக்க அனுமதிக்க வில்லை என்று தெரிவித்தனர். மேலும் இந்த பிரச்சினையை தொடர்பாக நீதிமன்ற உத்தரவினை உதாசீனப்படுத்திய அதிகாரிகள் மீது மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் எதிர் தரப்பைச் சார்ந்த சங்கரி என்பவர் நத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் ஆனால் அவர் எப்பொழுதும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இருப்பதும் அங்கு ஓ ஏ இருப்பதாகவும் ஏமாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த கோவிலில் உரிமைக்காகவும் விழா நடத்துவது தொடர்பாகவும் ஊர் மக்களுக்கு எதிராக தாங்கள் எங்கு மனு கொடுத்தாலும் அதனை தடுத்து வருகிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டினார்.
நீதிமன்ற உத்தரவுபடி காலம் தாழ்த்தி கோவிலை திறக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கோவிலை திறக்க விடாமல் ஜான்சன் நகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மேற்கொண்டு பிரச்சனை ஏதும் நிகழாமல் இருக்க அங்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
0 coment rios: