சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வேங்கை வயல் விவகாரத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சேலத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேங்கை வயலில் குடிநீரில் மனித மலம் கலந்த விவகாரம். விஸ்வரூபம் இடத்தில் சனி பகாலமாக அனைத்து கட்சியினராலும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்களே இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்ததை எடுத்து அனைத்து கட்சியினரும் தமிழக காவல்துறையின் விசாரணையில் இருந்து சிபிசிஐடி மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தற்பொழுது வரை நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம், அடுத்த கட்டமாக சிபிசிஐடி விசாரணையிலும் தங்களுக்கு நம்பிக்கை இல்லாதது உறுதியாகி உள்ளது என்பதால் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆத்தூர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணன், நல்ல தம்பி தங்கதுரை காசி விஸ்வநாதன் கருப்பசாமி பிரகாஷ் மல்லூர் பூபாலன் காந்தி லோகநாதன் புரட்சி கோவிந்த் மற்றும் மொய்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் பரணி மாரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும் ஆணவக் கொலை என தனி சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரியும் தலித் இன மக்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதோடு மட்டுமல்லாமல், வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி வசம் உள்ள இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் தலித் மக்களுக்கு எதிரான விசாரணையின் தீர்ப்பு வரும் பட்சத்தில் மிகக் கடுமையான அளவில் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ராஜு உட்பட கெங்கவள்ளி ஆத்தூர் ஏற்காடு மேட்டூர் சேலம் ஓமலூர் சங்ககிரி எடப்பாடி மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: