செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

மாநகராட்சி மன்ற கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம். மக்கள் மீது வரியை அள்ளிக் குவித்து விட்டு பற்றாக்குறை பட்ஜெட் உருவாக்கியுள்ளதாக கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மாநகராட்சி மன்ற கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம். மக்கள் மீது வரியை அள்ளிக் குவித்து விட்டு பற்றாக்குறை பட்ஜெட் உருவாக்கியுள்ளதாக கூறி  அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு. 

சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற. இந்த கூட்டத்தில் துணை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாத இடங்களிலும் கூட அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறினார். அப்போது அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து நண்பகல் 2025 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் அடங்கி நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சி கொறடா கே சி செல்வராஜ் கூறுகையில், 
இது ஒரு காகித பூ பட்ஜெட் என்றும் மக்களுக்கு பயன்படாத பட்ஜெட் என்றும் எதிர்பார்க்கும் வருவாயை தான் தான் மேயர் பேசுகிறாரே தவிர கடந்த கால பட்ஜெட்டை காப்பியடித்து தற்பொழுது அப்படியே வெளியிடப்பட்டுள்ளது என்றார். சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், மாநகராட்சி அறிகையில் பொதுமக்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத திட்டங்களும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்களின் மீது அதிகப்படியான வரச்சுமை சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று பெரிய திட்டங்கள் மூலம் மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாயை முடக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக மாமன்ற உறுப்பினர்களின் செயலை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்றத்திற்கு உள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சேலம் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையினை கிழித்திருந்து விட்டு மாநகராட்சியின் நிதிநிலை கூட்டத்தை புறக்கணித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: