சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது அமெரிக்க ஜனாதிபதியின் செயலை கண்டிக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிரடியாக கைது செய்து ராணுவ விமானத்தில் கை மற்றும் கால்களை பூட்டப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய அமெரிக்க ஜனாதிபதியின் டிரம்ப் செயல் இந்தியா உட்பட நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையும் அடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை ட்ரம்பின் செயலை கண்டித்தும் எதனை கண்டும் காணாதது போல் பெயரளவிற்கு கருத்துக்களை தெரிவித்த மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாணவர் மாவட்ட தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிரடியாக கைது செய்ததோடு மட்டுமல்லாமல், கைது செய்யப்பட்ட அனைவரையும் ராணுவ விமானத்தில் ஏற்றி அவரது கை மற்றும் கால்களில் பூட்டப்பட்டு அகதிகளை போல இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய செயல் கண்டனத்திற்கு உரியது என்றும், இதனை தட்டிக் கேட்காத மத்திய பாஜக அரசு இந்த சம்பவத்தை தட்டிக் கேட்காமல், வெளியுறவு துறை அமைச்சரை வைத்து பெயரளவுக்கு இந்தியாவின் கருத்தை தெரிவித்தது வேதனைக்குரியது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சி நிர்வாகி நிஷார் அகமது உட்பட முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: