வியாழன், 13 பிப்ரவரி, 2025

மாநில அரசின் அதிகாரத்தை, கல்வித்தரத்தை பறிக்கும் வகையில் இருக்கிறது யுஜிசி விதிகளின் திருத்தம்: ராம இளங்கோவன் பேட்டி.

மாநில அரசின் அதிகாரத்தை, கல்வித்தரத்தை பறிக்கும் வகையில் இருக்கிறது யுஜிசி விதிகளின் திருத்தம்: ராம இளங்கோவன் பேட்டி.

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் யுஜிசி விதிகளை மத்திய அரசு திருத்த கல்வி, இடஒதுக்கீடு உரிமையைப் பறிப்பதாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
மாநில அமைப்பு செயலாளர் ப.ரத்தினசாமி தலைமை வகித்தார். மாநில வெளியீட்டு செயலாளர் ராம இளங்கோவன் கண்டன உரையாற்றினார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்....

அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே பறித்துக் கொள்ளக்கூடிய பேரபாயம் இருக்கிறது. அதைக் கண்டித்து எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

கல்வி துறையில் இந்தியாவில் மிக சிறந்து விளங்குவது தமிழ்நாடு தான். அதேபோல் மருத்துவ கட்டமைப்பிலும் தமிழ்நாடு தான் முன்னேறிய இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் மாநில அரசின் அதிகாரத்தை, கல்வித்தரத்தை பறிக்கும் வகையில் இருக்கிறது. மாநில அரசின் கல்விக் கொள்கை மூலம், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து இன்றைக்கு நிறைய பேர் நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று மனுசாஸ்திரம் சொல்கிறது. 

அந்த மனுவின் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய மோடியின் பிஜேபி அரசு இன்றைக்கு அதை செயல்படுத்துவதற்காக துடிக்கிறது, அன்றைக்கு 1954ல் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தார். அதைக் கண்டித்து பெரியார் ஒரு கையில் பெட்ரோல் கேன், மறுகையில் தீப்பெட்டியை வைத்துக் கொள்ளுங்கள், 

குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி வாபஸ் பெறாவிட்டால் அக்ரஹாரத்தைக் கொளுத்துங்கள், நான் நாள் குறிக்கிறேன் என்று அறிவித்த பின்னர் தான் ராஜாஜி அந்த திட்டத்தை பின்வாங்கினார், ஆட்சியை விட்டு ஓடிப்போனார். 

அதேபோல மோடி அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பாக விஸ்வகர்மா யோஜனா என்ற குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. 

18வயது நிறைந்திருக்கக் கூடிய இளைஞர்கள், அவர்களுடைய பரம்பரைத் தொழிலை செய்வதாக இருந்தால் அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்வோம் என்று சொல்லி, படித்த இளைஞர்களை உயர்படிப்பு படித்து டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, விஞ்ஞானிகளாக வருவதை தடுக்கும் நோக்கில், அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்த திட்டத்தை மோடி இங்கே அறிமுகம் செய்திருக்கிறது. 

அதனுடைய மறுவடிமாகத் தான் இன்றைக்கு யுஜிசி விதிகளில் பல்கலைக்கழக மானிய விதிகளில் அனைத்தையும் திருத்தம் கொண்டு வந்து, தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய 69 சதவிகித இட ஒதுக்கீ்ட்டையும் முற்றாக பறி போகக் கூடிய நிலையில் இந்த திருத்தம் வழிவகை செய்திருக்கிறது.  

ஆகவே, இந்த யுஜிசி விதிகள் திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பழைய நிலையே தொடர வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார். 

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தெற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: