அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சி தலைவரின் வேண்டுகோளை ஏற்று இந்த கூட்டம் நடக்கிறது.
அதிமுக தொடங்கப்பட்டபோது, இந்த கட்சி 100 நாட்களுக்கு தாங்குமா என்று சொன்னார்கள். ஆனால், துன்பம், துயரங்களைத் தாண்டி இந்த இயக்கம் ஆல மரம் போல் வளர்ந்துள்ளது. எந்த தியாகத்தையும் செய்யும் தொண்டர்கள் அதிமுகவில் மட்டும் உள்ளனர்.
அதிமுக மூன்றாக பிரிந்து நின்றபோது கூட அந்தியூரில் தோல்வி அடையவில்லை. ஆனால், கடந்த தேர்தலில் அந்தியூர் தொகுதியில் சில துரோகிகளால் நாம் தோல்வி அடைந்துள்ளோம். அவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டியவர்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் நாம்.
அவர்கள் காட்டிய திசையில் மக்கள் வாக்களித்தனர்.
ஒரு இயக்கத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என அவர்களைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம். என்னைப் பொறுத்தவரை தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
0 coment rios: