சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வழக்கறிஞர்கள் கொலை முயற்சியில் தாக்கப்பட்ட விவகாரம். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். வழக்கறிஞர்களின் உயிர் பாதுகாப்பை வலியுறுத்தி ஒவ்வொருவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும். SDCBA தலைவர் இமயவரம்பன் கோரிக்கை.
சமீபகாலமாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே பணியில் சீருடைகள் இருக்கும் வழக்கறிஞர்களை தாக்கும் சம்பவங்களும் கொலை செய்யும் சம்பவங்களும் தொடர்கதை ஆகி வருகிறது என்றே கூறலாம். இது போன்ற சம்பவங்களுக்கு அவ்வப்போது ஒவ்வொரு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தங்களது எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வந்த வண்ணம் தான் உள்ளனர். என்றாலும் தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு மத்தியில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் சீருடைகளில் இருந்த வழக்கறிஞர்கள் கவின் மற்றும் தண்டபாணி ஆகிய வழக்கறிஞர்களை வரலாற்று கூற்று பதிவேடு குற்றவாளிகள் இருவர் கஞ்சா போதையில் தாக்கியதோடு மட்டுமல்லாமல் கூர்மையான ஆயுதம் கொண்டு அவர்களை கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்ட சம்பவம் சேலம் மாவட்ட வழக்கறிஞர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிருத்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த 8 காவலர்கள் இந்த சம்பவத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது வேதனையை அழிப்பதாக உள்ளது என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினரால் தங்களது ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இரண்டு வழக்கறிஞர்களும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை மிரட்டி உள்ளார்.
வழக்கறிஞர்களின் உயிர் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக்கும் இந்த சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற உலகத்தின் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகன் மற்றும் கண்ணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். அப்போது SDCBA தலைவர் இமயவரம்பன் நம்மிடைய குருகையில், சேலம் நீதிமன்ற வளாகத்தில் கொலை முயற்சி தாக்குதல் சம்பவம் நடைபெற்றதை அடுத்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை மிரட்டிய அஸ்தம்பட்டி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மீதும், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த 8 எட்டு காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட கொடூர குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறிய அவர், இது போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை தமிழக அரசு முறையாக கையாளவில்லை என்பதே காட்டுகிறது என்பதால் மற்றவர்களின் நலனுக்காக உழைக்கும் தங்களை போன்ற வழக்கறிஞர்களுக்கு துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதற்கு உண்டான உரிமத்தை வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்களின் உயிர் பாதுகாப்பிற்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லை என்ற காரணத்திற்காக இந்த கோரிக்கையை முன் வைப்பதாக SDCBA தலைவர் இமயவரம்பன் தெரிவித்தார்.
0 coment rios: