சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் விசிக பிரமுகர்களால் மிகப் பெரிய பொருட்டு அளவில் அமைக்கப்பட்ட சுவர் விளம்பரம் சேதம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக பிரமுகர் லெனின் குமார் முக்கிய நிர்வாகிகளுடன் COP அலுவலகத்தில் புகார் மனு.
ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் ஏன் உலகத் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் கட்சியின் மாநில மாவட்ட உறுப்பினர்கள் தமிழக முழுவதும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் விளம்பர பதாகைகளை வைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் சேலம் வடக்கு மாவட்ட விசிக சார்பில் சேலம் மணல்மேடு மற்றும் பாரதி வித்யாலயா பள்ளி இடைப்பட்ட பகுதியில் மிகப்பிரமாண்டமான அளவில் அதிகப்படியான பொருட்செலவில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் விசிக மாநகர் மாவட்ட துணை செயலாளர் திருமதி காயத்ரி ஆகியோர்களது புகைப்படங்களை மையப்படுத்தி சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரத்தில் உள்ள தொல் திருமாவளவன் மற்றும் திருமதி காயத்ரி ஆகியோரது உருவப்படங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சேலம் மாநகர் மாவட்ட விசிக துணை செயலாளர் திருமதி காயத்ரி என்ற பெயரையும் வெள்ளை பூச்சால் அளித்துள்ளனர்.
இது அந்த விளம்பரத்தை வெளிப்படுத்திய நபர்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இதனை அடுத்து சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த விசிக சேலம் மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் இளைஞர் எழுச்சி பாசறையில் சேலம் வடக்கு என்ற பொறுப்பில் உள்ள பிரமுகர் லெனின்குமார் என்பவர் சேலம் மாநகர காவல் துறை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் வந்திருந்தார்.
புகார் மனு அளிக்கப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலாளர் நம்மிடையே கூறுகையில், தங்களது கட்சியின் வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் அது யாராக இருக்கட்டும் அவர்கள் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவிலான மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் விசிக ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் பாவேந்தன்.
மனுவினை பெற்றுக்கொண்ட சேலம் மாநக காவல்துறை ஆணையர் அவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாரபட்சம் பார்க்காமல் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவைத்துள்ளார் என விசிக பிரமுகர்கள் புகார் மனு அளித்த பிறகு நம்மிடையே தெரிவித்தனர்.
இந்த புகார் மனு அளிக்கும் நிகழ்வின் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கட்சியினர் என ஏராளமான உடன் இருந்தனர்.
0 coment rios: