சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் குண்டு கட்டாக கைது. சேலம் மாநகர காவல் துறையினரின் அதிரடியால் சேலம் கோட்டை மைதானம் பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
தமிழகத்தில் சாதி வெறியர்களினால் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து ஏவி விடும் வன்முறை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் படத்தை சேதப்படுத்தும் கும்பலை உடனடியாக கொண்ட தடுப்பு காவல் சட்டத்தில் சிறை படித்திட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற இருந்த இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையில், காவல்துறையினரின் அனுமதியையும் மீறி சேலம் அண்ணா பூங்கா பகுதியிலிருந்து ஊர்வலமாக சேலம் கோட்டை மைதானத்தை நோக்கி வந்தனர்.
இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட துணை செயலாளர் காயத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், மேனாள் துணைப் பொதுச் செயலாளர் கலையரசன் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மாநில துணை செயலாளர் பாவேந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சாதி வெறியர்களால் பட்டியலிட மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் வன்முறைகள் நடத்துபவர்கள் மீதும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் மணல் மார்க்கெட் ஜான்சன் பேட்டை பிரிவு சாலை பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் விளம்பரப்படுத்தியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரம்மாண்ட விளம்பரத்தில் காயத்ரி மற்றும் திருமாவளவன் ஆகியோரது புகைப்படங்கள் மறுமணம் அவர்களால் சேதப்படுத்தப்பட்டது என்றும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் மற்றும் சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் காவல்துறையினரை குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீசிக்கா நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனை எடுத்து சேலம் மாநகர காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் காவல் துறையினரின் அனுமதியையும் மீறி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்ய முயன்றனர். அப்போது காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக அவர்களை கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியில் நிர்வாகிகள் அங்கப்பன் கிருஷ்ணமூர்த்தி மணிக்குமார் லெனின் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாநகர காவல் துறையினரின் இந்த அதிரடி சம்பவத்தால் சேலம் கோட்டை மைதான பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.
0 coment rios: