சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் நாலெட்ஜ் பொறியியற் கல்லூரியின் 12-வது ஆண்டு பட்டமளிப்பு விழா.
சேலத்தை அடுத்துள்ள ராக்கி பட்டி அருகே உள்ள நாலேஜ் பொறியியற் கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான 12-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நாலெட்ஜ் குழுமத்தின் அறக்கட்டளை செயலாளர் முனைவர் குமார் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர் ஸ்ரீ ராஜராஜன் மற்றும் மிஸ்டர் கூப்பர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மோகன்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சுமார் 750 பொறியியற் மற்றும் மேலாண்மை துறை களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
அது மட்டுமில்லாமல் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த 29 மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து நடைபெற்ற விழாவை பேசிய சிறப்பு விருந்தினர்கள், உலகின் தலைசிறந்த விஞ்ஞானியும், உலகமே அஞ்சி நடுங்கும் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையின் நாயகருமான Dr.A.P.J அப்துல் கலாம் அவர்களின் கூற்றான மாணவ மாணவியர் ஒவ்வொருவரும் கனவு கண்டு தங்களது லட்சியத்தை அடையும்வரை இந்த போட்டி மிகுந்த சமுதாயத்தில் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஆசை என்னவோ அதனை தடுத்து தங்களது எதிர்பார்ப்பை திணிப்பதை தயவு செய்து கைவிட்டு அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரிய ில் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் கல்லூரியில் செயல் தலைவர் மான முனைவர் சீனிவாசன் அவர்கள் பேசுகையில் பொறியாளர்கள் தங்களது பணியில் சமூக பொறுப்புடன் மற்றும் நெறிமுறைகளுடன் செயல்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் விசாகவேல் அவர்கள் 2024 2025 வாசித்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். அறக்கட்டளையின் செயலாளர் சுரேஷ்குமார் அறக்கட்டளை உறுப்பினர்கள் இயக்குனர்கள் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
0 coment rios: