புதன், 5 மார்ச், 2025

சேலம் தாதம்பட்டியில் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு. ரியல் எஸ்டேட் செய்து வரும் முறைகேட்டார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் தாதம்பட்டியில் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு. ரியல் எஸ்டேட் செய்து வரும் முறைகேட்டார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக. 

சேலம் மாநகரம் 37 வது கோட்டத்திற்குட்பட்டது தாதம்பட்டி- பெருமாள் கோவில் மேடு. இதன் அருகே உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தின் பின் பகுதியில்  அமைந்துள்ள சுமார் 7 ஏக்கர் வன துறைக்கும், அரசுக்கும் பாத்தியபட்ட  நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் செய்ய சட்டத்திற்கு புறம்பாக விதி மீறல் செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் தென் மண்டல தலைவருமான சரஸ்ராம் ரவி சேலம் மாவட்ட ஆட்சியர், சேலம் மாவட்ட வனத்துறை அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார் மனு ஒன்றினை  அனுப்பி உள்ளார். அந்த மனுவில், 
அந்த சுமார் 7 ஏக்கர் வன துறைக்கு பாத்தியபட்ட நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் அந்த பகுதி சுற்றுபுற வாழ் பொது  மக்களிடம் தடை இல்லா ஒப்பதல் உறுதி பத்திரம் பெறாமலும், மாசுகட்டுபாடு துறை அனுமதி பெறாமல் பாறைகளை வெடி வைத்தும், ஆட்களை கொண்டும் பணி செய்து வருவது சட்ட  விதி மீறலாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புகார் மனு மீது சேலம் வன துறை அதிகாரி ( District Forest Officer - Salem ) விசாரணைக்கு உத்தரவிட்டு அந்த பகுதி வன நிலங்களை பாதுகாத்திட  வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள சரஸ்ராம் ரவி, 
சம்மந்தபட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் வருவாய் 'அ ' பதிவு படி நிலத்தை அளவீடு செய்ய வட்டாச்சியர் சேலம் வடக்கு அவர்களுக்கு நிர்வாக உத்தரவு வழங்கிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இந்த புகார் குறித்து Chief Conservator of Forest Dept - Chennai அவர்களுக்கு புகாராக அளித்து விசாரணைக்கு உத்தரவிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு குறித்தான நகல்கள் மாவட்ட ஆட்சியர் சேலம் மாவட்டம், வட்டாச்சியர் சேலம் வடக்கு மற்றும்  கிராம நிர்வாக அதிகாரி- தாதம்பட்டி 
சேலம் மாநகரம் உள்ளிட்டவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: