கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாடி, வதங்கி வருகின்றனர். இந்த நிலையில், இன்றும் (மார்ச் 5ம் தேதி) வழக்கம்போல் காலை முதலே ஈரோடு மாநகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி 100 டிகிரியையும் கடந்து 101.84 டிகிரியாக பதிவானது.
இதனால், சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும் பள்ளி- கல்லூரி மாணவிகள், பெண்கள் துப்பட்டா மற்றும் புடவையால் தலையில் போர்த்தியபடியும் சென்றதை காண முடிந்தது.
0 coment rios: