S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்டம் வன துறையில் பணியாற்றும் பட்டியலின - பழங்குடியின ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. தவறும் பட்சத்தில் அனைவர் மீதும் அட்ராசிட்டிஸ் ஆக்ட் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்சி / எஸ்டி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம்.
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்கள் பணியாற்றி வந்த போதிலும், பெரும்பாலான துறைகளில் பணியாற்றி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு அச்சுறுத்தல்களும் பணி பாதுகாப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் அவர்களுக்கு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்சி / எஸ்டி ஊழியர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும் மற்றும் RLD தென் மண்டல தலைவருமான சரஸ்ராம் ரவி கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த 25 ஆண்டுகளாக மாவட்டம் முழவதும் பணியாற்றும் SC/ ST ஊழியர்களை சாதிய வன்மத்துடன் நெருக்கடிகள் கொடுத்து அச்சுறுத்தும் சேலம் மாவட்ட வன துறை கண்காணிப்பாளர் காசிராமன் மற்றும் இளநிளை உதவியாளர் கனகராஜ் ஆகியோர் என்று தெரிவித்துள்ள அவர் சீருடை பணியாளர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் என்றும் அதுமட்டுமல்ல M சுரேஷ் என்கிற எழத்தர் சேலம் DFO அலுவலகத்தில் பணி செய்து வரும் பட்டியலின ஊழியரான அவரை கடந்த சில ஆண்டுகளாக பணி செய்ய விடாமல் அவரது பணிகளை கண்காணிப்பாளர் காசிராமன் என்கிற சாதி இந்துவான அவர் தொடர்ந்து. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணி தொடர்வது ஆச்சரியமாகவும் , அதிர்ச்சியாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காரணம் அவர் செய்து வரும் பட்டியலின ஊழியர்களுக்கு எதிரான சாதிய வன்முறையை எந்த மேல் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என தெரிவித்துள்ளதோடு,
காரணம் பல வகையில் வன துறை ஒப்பந்ததார்ர்கள், துறை ரீதியான திட்டங்களின் நிதி ஆகியவற்றில் நடை பெறும் லட்ச கணக்கில் ஊழல் எனவும் சமீபத்தில் நேர்மையான ஊழியரான சுரேஷ்சை ஆத்தூர் இட மாற்றம் செய்துள்ளது சேலம. வன கோட்ட நிர்வாகம் என தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இரு இடம் காலியாக இருக்கும் போது பட்டியலின ஊழியரான சுரேஷ்க்கு வழங்கபடாமல் பொது சமூகத்தை சார்ந்த வேல்முருகனை சேலத்தில் பணியமர்த்திவிட்டு பட்டியலின ஊழியரான சுரேஷ்சை ஆத்தூர் இடம் மாற்றம் செய்த வன துறை சேலம் சரகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் அதுமட்டுமல்ல, பட்டியலின ஊழியர் சுரேஷ் மருத்துவ விடுப்பில் சில மாதங்கள் இருக்கும் போது அவருக்கு 17( b) குற்ற அறிக்கை அளித்த சேலம் வனத் துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் தனது ஆதங்கத்தை கண்டினமாக வெளியிட்டுள்ளார். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்சி எஸ்டி ஊழியர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி.ஒரு அரசு ஊழியர் மருத்துவ விடுப்பபில் இருக்கும் போது 17( b) குற்ற அறிக்கை அளிப்பது சட்டபடி விதி மீறலாகும்.
அதுவும் பட்டியலின ஊழியரான சுரேஷ்க்கு 17( b ) அளித்த அதிகாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம. 2015-3(1) கீழ் வழக்கு பதிய முடியும். ஆகவே சுரேஷ்க்கு வழங்கபட்ட அநீதியான 17 ( b ) குற்றசாட்டை வன துறை நிபந்தனை இன்றி வாபஸ் பெற வேண்டும். அவரை வன துறை குடியிறுப்பிலிருந்து காலி செய்ய தொல்லை அளிக்க கூடாது. இந்த சேலம் கோட்ட வன துறை நிர்வாக சீர்கேடு சாதிய வன்முறை குறித்து தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையம் - சென்னைக்கு புகார் ஒன்று ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக அனுப்பி உள்ளோம். விசாரணை அறிக்கை வரும் வரை வன துறை அதிகாரிகள் பட்டியலின ஊழியரான சுரேஷ்சை துன்புறுத்தவோ, வீடு காலி செய்யவோ தொல்லை கொடுக்க கூடாது என்று ஊழியர்கள் கூட்டமைப்பு சேலம் வனதுறை அதிகாரிகளை வலியுறுத்துகின்றது. தவறும்பட்சத்தில் அனைவர் மீதும் Atrocities Act- 2015-3(1) கீழ் SC/ ST. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதியப்படும் என்றும் தனது கண்டன அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
0 coment rios: