மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம்
மும்மொழி கல்விக் கொள்கை 2020-க்கு ஆதரவு தெரிவித்து "கையெழுத்து இயக்கம் - 2025" பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் K.அண்ணாமலை அவர்களால் நேற்றைய தினம் (05.03.2025) தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து இயக்கம் ஈரோடு தெற்கு மாவட்டத்தில் இன்று காலை சூரம்பட்டி கிழக்கு மண்டல் தலைவர், செல்வமுத்துக்குமார் தலைமையில் ஜெகநாதபுரம் ஆர்ச் எதிரில் 46-வது வார்டு, கிராமடை பகுதியில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்து கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம். செந்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் எஸ்.டி. செந்தில்குமார், துணைத் தலைவர்கள் குரு. குணசேகரன், கிருஷ்ணவேணி, முன்னாள் துணைத் தலைவர் அமுதா, மாவட்ட பொதுச் செயலாளர் ராயல் சரவணன், ஒரே நாடு ஆசிரியர் சரவணன், மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு தலைவர் எஸ். மயில்சாமி, விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜ், மாவட்டச் செயலாளர் விவேகானந்தன், மாவட்ட நிர்வாகி சாஸ்தா, மாவட்ட வக்கீல் அணி பிரிவு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் மாணிக்க சுந்தரம், லட்சுமி சிவா, மண்டல் பொதுச்செயலாளர் ஜெய பிரதீப், மண்டல் செயலாளர் குணசேகர், மண்டல் நிர்வாகிகள் மாணிக்கம், மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: