ஈரோட்டில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (மார்ச் 6ம் தேதி) தொடங்கப்பட்டது.
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில், தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி ஈரோடு ஜெகநாதபுரம் ஆர்ச் எதிரில் 46வது வார்டு, கிராமடை பகுதியில் இன்று நடைபெற்றது. சூரம்பட்டி கிழக்கு மண்டல் தலைவர் செல்வ முத்துக்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம். செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
0 coment rios: