வியாழன், 6 மார்ச், 2025

சேலத்தில் பழைய தேங்காய் குடோனில் திடீர் தீ விபத்து. அவசம்பாவிதங்களை தவிர்க்க சாதுரியமாக செயல்பட்டு தீயை அணைத்த மாமன்ற உறுப்பினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் பழைய தேங்காய் குடோனில் திடீர் தீ விபத்து. அவசம்பாவிதங்களை தவிர்க்க சாதுரியமாக செயல்பட்டு தீயை அணைத்த மாமன்ற உறுப்பினர். 

60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சி. இதில் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் சற்று வித்தியாசமானவர். தான் வழக்கறிஞர் பணி செய்து வந்தாலும் மாமன்ற உறுப்பினர் என்பதன் அடிப்படையில் தனது கோட்டத்திற்கு உட்பட்ட மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு உதவிகளை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஆதரவற்றோர் இறக்கும் நிலையில் அவர்களை மீட்டு அவர்களுக்கான ஈமச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருவதோடு தனது கோட்டத்திற்கு உட்பட்ட ஏழை எளியவர்கள் நாள்தோறும் பயன்பெற வேண்டும் என்பதற்காக தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நாள்தோறும் தன்னலம் பாராமல் பிறர் நலனுக்காக சிற்றுண்டிகளை வழங்கி வருகிறார். 
இதுபோன்று இவருடைய பெருமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட வாய்க்கால் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே பழைய தேங்காய் குடோன் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்து வந்துள்ளது. இதில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக கொழுந்து விட்டு எறிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் பரவியதை அறிந்த திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் தீயணைப்பு வாகனம் வருவதற்கு தாமதமாகும் என்று ஒரே காரணத்திற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கொழுந்துவிட்டு எரிந்த தீயினை முற்றிலுமாக அணைத்து அருகில் உள்ள உடமைகளுக்கும் உயிர்களுக்கும் எந்தவிதமான சேதாரமும் இன்றி பாதுகாத்தார். 
இது அந்தப் பகுதியினரிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்று கூறலாம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: