சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி. பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் மாணாக்கர்கள் அசத்தல்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் 2025 கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. சேலம் அரசு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த பேச்சுப் போட்டிக்கு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் செண்பகலட்சுமி, மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி மற்றும் தமிழ்நாடு கேரம் கழக தலைவர் அமான் என்கின்ற நாசர்கான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த நிகழ்வினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சு போட்டியில் ஒன்றே குலம் ஒருவனே தேவன், இந்திய சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு மற்றும் விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு என்பன உள்ளிட்ட 10 தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டன. இதில் சேலம் மாணவரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் உற்சாகத்துடன் பேசி அசத்தியது அனைவரின் வரவேற்ப்பனையும் பெற்றது என்றே கூறலாம். இதனை அடுத்து வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 coment rios: