சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி.
சேலம் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மற்றும் செயின்ட் போனி ஒயிட் நர்சிங் கல்லூரியின் மாணவிகள் இணைந்து உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அஸ்வின் செஹி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியினை சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அஸ்வின் செஹி கூறுகையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் உலக அளவில் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டில் எண்பது புள்ளி சைபர் மில்லியன் ஆகவும் அதிகரித்துள்ளது அடுத்து வரும் 20040ல் 111.8 மில்லியன் ஆகவும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வை இழந்து உள்ளார்கள்.
40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு இந்த நோயால் 12.8 சதவிகிதம் கண்பார்வையை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய் பற்றி தெரியவில்லை. ஆரம்ப நிலையில் இந்த நோய் உள்ளதா என்பது கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் பார்வை பறிபோவதை தடுக்கலாம். இந்த நோயால் 40 வயதிற்கு மேற்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் 40 வயதிற்கு மேற்பட்டவர் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம். தங்களது மருத்துவமனை பொதுமக்களின் கண் நலனுக்காக மார்ச் மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வில் மருத்துவமனையில் விழித்திரை மருத்துவத் சிவராஜ் மருத்துவர்கள் ஆன்ட்ரியோ ஜோஸ், மேலாளர் செந்தில், மார்க்கெட்டிங் மேலாளர் கோவிந்தசாமி மற்றும் ஊழியர்கள் நர்சிங் கல்லூரியின் முதல்வர் சண்முகப்பிரியா மற்றும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: