ஈரோடு மாநகராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட அக்ரஹாரம் நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 43. இவர் மாநகராட்சி துணை கமிஷனரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், எங்கள் வீட்டு கைச்சுவரை முதலாவது மண்டலத்தில் பணிபுரியும் இளநிலை பொறியாளர் திருமூர்த்தி, எவ்வித முன்னறிவிப்புமின்றி நேற்று முன்தினம் காலை இடித்து தள்ளினார். பக்கத்து வீட்டு சாக்கடை நீர் தெளிக் காமல் இருக்க கைக்சுவர் அமைக்கப்பட்டது.
இதே தெருவில் பல வீடுகள், கடை களில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து ஷெட் அமைத் துள்ளனர். இதுபற்றி என் தாயார் கேட்டபோது அவரை மிரட்டியுள்ளார்.
என் வீட்டருகில் உள்ள வர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என் வீட்டை மட்டும் இடித்து தள்ளியுள் ளனர். விசாரித்து இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
0 coment rios: