சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஶ்ரீ கணேஷ் கல்லூரியின் ஆண்டு விழா கோலாகலம். கல்லூரி மாணாக்கர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சேலம் அம்மாபேட்டை ஶ்ரீ கணேஷ் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி மைதானத்தில் வெகு உற்சாகமாக நடைபெற்றது. கல்லூரி கல்விக் குழுமங்களின் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் சின்னத்திரை புகழ் நடிகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஆண்டு விழா நிகழ்வின்போது சின்னத்திரை நடிகர்களின் மிமிக்கிரி அரங்கையே அதிரசெய்யும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பட முன்னணி நடிகர்களின் குரல்களை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த மிமிக்ரி நிகழ்வினை கண்டு ரசித்துக் கொண்டிருந்த சக மாணவ மாணவிகள் ரசித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியின் இறுதியாக தேமுதிக நிறுவனரும் திரைப்பட நடிகருமான மறைந்த விஜயகாந்த் அவர்களின் குரலில் சின்னத்திரை நடிகர்கள் பேசத் தொடங்கிய பொழுது விழா அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது என்றால் நிதர்சனம்.
காரணம் அத்தனை முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்த பொழுதும் விஜயகாந்தின் அந்த ஆவேச பேச்சு அந்த குரல் அவர் இறந்த நிலையிலும் தற்பொழுதும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையே காட்டியது. இதனை அடுத்து கல்லூரி மாணவ மாணவிகளின் தனிநபர் மற்றும் குழு நடனங்களில் பங்கேற்ற மாணாக்கர்கள் திரைப்படப் பாடல்களுக்கு ஏற்றவாறு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடனம் ஆடியது காண்போரை வியக்கச் செய்யும் வகையிலேயே அமைந்திருந்தது. இதனை எடுத்து கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பாக நடனமாடிய கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் துறை தலைவர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: