சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் களைக்கட்டியது வடஇந்தியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாப்படும் ஹோலி திருவிழா. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் பல வண்ண சாயப்போடிகளை தூவியும் முகத்தில் பூசியும் கொண்டாடி மகிழ்ந்தனர்...
புரானக்கடவுளான ஸ்ரீ நாராயணன் மீது திராத பக்தி கொண்ட பக்த பிரகலாதனை தீயில் இட்டு கொள்ளும் முயற்சியில் சாகாவரம் பெற்ற ஹோலிகா தீயில் கருகிய நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி திருவிழா இன்று நாடு முழுவதும் வெகு உற்ச்சாகமாக க்ன்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக சேலத்தி வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சேலம் அங்கம்மாள் காலனி, தேவேந்திரபுரம், நாராயனநகர், உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி திருவிழா களைகட்டியது.
சேலம் அங்கம்மாள் காலனி பகுதியில் திரண்ட வடஇந்தியர்கள் பாரம்பரிய உடை அணிந்தும், பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்தும் நடனமாடினர். அதுமட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஒருவருக்கொருவர் பலவண்ண பொடிகளை தூவியும், முகத்தில் பூசிக்கொண்டும் தங்களது தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்திக்கொண்டனர்.
இதனால் சேலம் மாநகரில் வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் அனைத்தும் வண்ணமயமாக காணப்பட்டது.
0 coment rios: